இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!
இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.
பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து தங்கள் வேட்கையை வெளிப்படுத்துகின்றனர். தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் கடந்த ஆண்டு திருச்சிக்கு வருகை தந்தார். இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டிற்கான வரி வருவாயை கூட மத்திய அரசு வழங்குவதில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
இந்த நிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் நாளை (ஜன.6) முதல் ஒரு வாரம் பொங்கல் விழா நடைபெற உள்ளது. விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி நாளை (ஜன.6) காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும் 100-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலை வந்துள்ளனர்.