Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

03:41 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றவை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

1). மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

2). ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

3). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

4). ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.

5). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

6). அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. 

7). ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags :
guidelinesJallikattuTN Govt
Advertisement
Next Article