Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை!

09:52 PM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

Advertisement

மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதே போல் மற்றொரு படகில் 23ஆம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரண்டு விசைப்படகுகளிலும் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி!

இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இந்நிலையில், இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த தமிழ்நாடு  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் கோரிக்கை முன்வைத்தார். அப்போது கனிமொழி, ஆ.ராசா, நவாஸ் கனி உள்ளிட்ட எம்.பி.,க்கள் உடனிருந்தனர்.

Tags :
A. RazaAnithaRadhakrishnanDMKFishermanJaishankarKanimozhiNawaz Gani
Advertisement
Next Article