Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் #Jailer2 அறிவிப்பு டீசர்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் யூடியூப்பில் நம்.1 டிரெண்டிங்கில் உள்ளது.
04:02 PM Jan 15, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன்.

Advertisement

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழுவினர் நேற்று  வெளியிட்டிருந்தனர். இந்த டீசர் இணையத்தில் வேகமாக பரவி வைரலானது. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் யூடியூப்பில் 88 லட்சம் பார்வைகளை பெற்று நம்.1 டிரெண்டிங்கில் உள்ளது.

Tags :
anirudhcinemajailerJailer 2Jailer 2 Announcement Teasermovienelsonnews7 tamilNews7 Tamil UpdatesRajiniRajinikathTeaserThalaivartrending
Advertisement