ஐஸ் கட்டிகளை கொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’.. தேனி பாஜக சார்பில் வடிவமைப்பு!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனியில் 2024 கிலோ ஐஸ் கட்டிகளை வைத்து "ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுத்து வடிவில் உருக்கி நூதன முறையில் பக்தியை வெளிப்படுத்தினர்.
அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று (ஜன. 22) பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
2024 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டிகளை இரண்டு மணி நேரமாக உருக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுத்து வடிவில் வாசகத்தை உருவாக்கினர். ஐஸ் கட்டிகளில் ஜெய்ஸ்ரீராம் என்று உருவாக்கப்பட்டதை பொதுமக்கள் அதன் முன் நின்று செல்பி எடுத்தும் சென்றனர்.