Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாபர் சாதிக் வழக்கு - முக்கிய விசாரணை அதிகாரி மாற்றம்!

05:17 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரி ஞானேஸ்வர் சிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து முக்கிய விசாரணை அதிகாரி ஞானேஸ்வர் சிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் அவரை அந்த பதவியில் இருந்து திரும்ப பெற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாபர் சாதிக் விவகாரத்தில் தமிழ்நாடு போலீசாரை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார். பல்வேறு பேட்டிகளில் இது தொடர்பான கருத்துகளைக் கூறி வந்தார். இதனால் ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டதாக ஞானேஸ்வர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், ஜாபர் சாதிக் கைதின் போது பல்வேறு விதிமீறல்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் என்சிபி துணை இயக்குநர் பதவியில் இருந்தும் ஞானேஸ்வர் சிங் திரும்பப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம் எதற்காக இந்த மாற்றம் என்பது குறித்த தகவல்கள் மத்திய அரசின் செய்திக்குறிப்பில் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chief Investigating OfficerEDJaffer Sadiq
Advertisement
Next Article