Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெஸ்ட் கேப்டன் பதவி… மனம் திறந்த ஜடேஜா!

இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
03:25 PM May 29, 2025 IST | Web Editor
இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
Advertisement

இந்திய நட்சத்திர கிரிக்கெட்டர் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்வு முடிவு, டெஸ்க் கிரிக்கெட்டில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு புது கேப்டனையும் தேட வைத்துள்ளது.

Advertisement

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்த ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்படும் வரும் நிலையில், கேப்டன் பதவிக்கு ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜா பரிசீலிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது விருப்பம் குறித்து ஜடேஜா மனம் திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடனான நேர்காணலில் பேசிய ஜடேஜா,

நிச்சயமான எனக்கும் டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டும் என விருப்பம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். நான் விளையாடிய கேப்டன்களின் ஒவ்வொருவரின் மனநிலை குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். வீரர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு புரியும்.

ஒவ்வொரு கேப்டனுக்கும் அந்த அணியை வழிநடத்துவதில் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறைகள் இருக்கும். நான் தோனி தலைமையில் அனைத்து வடிவங்களிலும் விளையாடி இருக்கிறேன். அவருடைய சிந்தனைகள் மிகவும் எளிமையாக இருக்கும்.

ஒரு பேட்டர் குறிப்பிட்ட ஷாட்டினை அடிப்பார் என உணர்ந்தால் அந்தப் பகுதியில் ஃபீல்டர்களை நிறுத்தி பேட்டரை அசௌகரியத்து உள்ளாக்குவார். டி20, ஐபிஎல் போட்டிகளில் அனைத்து பந்துகளுமே முக்கியமானது. இதுமாதிரி டெஸ்ட் போட்டிகள் கிடையாது. அனைத்து பந்துகளுக்கும் ஃபீல்டிங் மாற்ற தேவையில்லை.

டெஸ்ட்டில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப 2, 3 ஃபீல்டர்களை மாற்றலாம். பேட்டருக்கு ஏற்ப மாற்றத்தேவையில்லை. எளிமை, ஆனால் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார். சமீபத்தில் அஸ்வினே ஜடேஜா அல்லது பும்ராவை டெஸ்ட் கேப்டனாக்கலாம் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
IndiaRavichandran AshwinRavindra JadejaTest Cricket
Advertisement
Next Article