Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான்” - இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா

சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான் நினைவுக்கு வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
03:12 PM Jan 25, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜன.25) இரவு 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்றே (ஜன.24) இரு அணிகளும் சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி சமூக வலைதளப்பக்கத்தில்  வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் இந்திய அணி வீரர்களிடையே சென்னையில் விளையாடுவது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு இந்திய அணி வீரர்கள் பதிலளித்து வந்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா பேசியபோது, “சென்னை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த்தும் தோனியும் தான்... தலைவா...” என பதிலளித்துள்ளார்.

Tags :
Chepauk stadiumCricketdhoniindvsengRajinikathT20 cricketTilak Varma
Advertisement
Next Article