Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிப்ஸ் பாக்கெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மணமக்கள் ஊர்வல வாகனம்!

09:56 AM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

மணமக்களின் ஊர்வல வாகனம் சிப்ஸ் பாக்கெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

மணமக்கள் எப்போதும் தங்கள் திருமணம் தனித்துவமாகவும்,  தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகவும் இருப்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளை எடுக்கின்றனர்.  இவ்வாறு வித்தியாசமாக தாங்கள் கொண்டாடும் வீடியோக்களை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்வர்.  அவ்வாறு பகிரப்படும் சில வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஊர்வலமாக காரில் அழைத்து வரப்படுவர். மணமக்களை அழைத்து வரும் கார் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆனால் சத்யபால் யாதவ் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மணமக்களின் வரவேற்பு காரானது சிப்ஸ் பாக்கெட்டுகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.  பிப்ரவரி 7  ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 77 மில்லியனுக்கும் அதிக பார்வையாளர்களை கடந்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.

இது சிப்ஸ் நிறுவன உரிமையாளரின் திருமணம். அப்படித்தான் இருக்கும்.

காருக்கு கல்யாணம் நடந்துருக்கும் போல.

இதோ வந்துட்ட... என பலரும் கிண்டலாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
instagramKurkureMarriage VideoViralWedding Deccaration
Advertisement
Next Article