Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சந்தோஷத்தை இழந்த மாதிரி இருக்கு” - கல்லூரி குறித்து முதலாம் ஆண்டு ஐஐடி மாணவர் கருத்து!

12:01 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

பாம்பே ஐஐடி கல்லூரியிரின் மாணவன் ஒருவன்,  ‘ஐஐடி மேல் படிப்புகளை தொடர்வதற்கு தங்க நுழைவாயிலாக இருக்காது’  என தெரிவித்துள்ளான்.

Advertisement

முதலாம் ஆண்டு ஐஐடி படிக்கும் மாணவர் ஒருவர் தனது கல்லூரியின் அனுபவங்களை அமெரிக்க செய்தி வலைத்தளமான ரெடிட்டில் பகிர்ந்துள்ளான்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“இங்கு ஒரு இயலை ஒரே நாளில் நடத்துகின்றனர்.  கிரேடு சிஸ்டமும் ஆசிரியர்களுக்கு உதவி செய்யும் மாணவர்கள் ( பிடித்த மாணவர்கள்) என்ற அடிப்படையில் உள்ளது. சத்தியமா இந்த நான்கு வருடம் என்ன பன்ன போறனு எனக்கு தெரியல. ஐஐடி படிச்சா மேல்படிப்புக்கான தங்க நுழைவாயிலா இருக்குனு நினைக்கிறோ. ஆனால் அது உண்மையில்லை. எனக்கு என்னுடைய சந்தோஷத்தை இழந்த மாதிரி இருக்கு. பள்ளிக்கூடத்த விட இந்த கல்லூரி மோசமா இருக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இவரின் இந்த பதிவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

“எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. நான் என்னுடைய டிசைனிங் கோர்ஸ் பாடத்திற்கு செய்த ப்ராஜக்டிற்கு குறைந்த மதிப்பெண்களையே பெற்றேன். ஆனால் எனது நண்பன் அதே ப்ராஜக்டிற்கு அதிக மதிப்பெண்களை வாங்கினான்.

நானும் முன்பு அங்கு படித்த மாணவன்தான். நான் இதை உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் உயர்கல்விய தொடரனுனு நெனச்சிங்கனா நல்ல கிரேடு வாங்கிருக்கனு. அத கண்டிப்பா எதிர்பாப்பாங்க. நீங்கள் அப்படி மேல்படிப்பு எது படிக்க விரும்பலனா 7.5க்கு கீழ மார்க் வாங்கிக்கோங்க. ஆனா வேலைவாய்ப்புகள யோசிச்சிக்கோங்க. ஆனா எந்த கல்லூரிகளு உங்கள பத்தி கவலப்பட மாட்டாங்க” என பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
IIT BombayIIT studentstudentTeaching Methods
Advertisement
Next Article