Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது" - முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பேச்சு!

07:26 AM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

விளையாட்டு துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் :துடைப்பம், வாளி, ப்ரெஷ்.. கல்யாண கிஃப்ட் அலப்பறைகள்.. நெல்லையில் கலகலப்பை ஏற்படுத்திய திருமண விழா..

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், முர்ஷிதாபாத்தில் நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதான் கலந்து கொண்டார். அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூசுப் பதான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.மக்களிடம் பேசி வருகிறேன். இனி மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களுக்குச் சேவை செய்ய முடியும். இது எனக்கு நல்ல உணர்வைத் தருகிறது. இங்கு நான் பெற்ற அன்பு, அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். இவை அனைத்தும் அவர்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது. அரசியலில் இளைஞர்களின் நேர்மறையான ஈடுபாட்டைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் ஒரு மாற்றந்தை விரும்புகிறார்கள், மேலும் அவர்களுக்காக வேலை செய்யக்கூடிய ஒருவரை அவர்கள் தேடுகிறார்கள்"

இவ்வாறு பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதான் தெரிவித்தார்.

Tags :
Berhampur constituencyElection2024Elections2024Former cricketerLok Sabha electionsPoliticsTrinamul CongressWest bengalYusuf Pathan
Advertisement
Next Article