Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் நாளை நான்தான் முதலமைச்சர் என சொல்வது நகைச்சுவை” - அமைச்சர் கீதா ஜூவன் பேச்சு!

05:43 PM Dec 07, 2024 IST | Web Editor
Advertisement

நேற்று பெய்த மழையில் முளைத்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நாளை நான்தான் முதலமைச்சர் என சொல்வது நகைச்சுவையாக உள்ளதாக அமைச்சர் கீதா ஜூவன் விமர்சனம் செய்தார்.

Advertisement

டிசம்பர் 7, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தென் மண்டல ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜூவன் திமுக இல்லையென்றால் இன்று யாரும் காலில் செருப்பும், தோலில் துண்டும் போட முடியாது என்று தெரிவித்தார்.

அம்பேத்கருக்கு முதன் முதலில் சிலை அமைத்ததே திமுக தான். மற்றவர்கள் இல்லாதது பொல்லாததுகளை எல்லாம் பேசி பொய்யான வதந்திகளை பரப்பி திமுகவின் வாக்குகளை குறைக்க பார்கிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புற்றீசல் போல நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் யார் என்றால் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் தான் என்றும், நேற்று கட்சி தொடங்கி நாளை நான் தான் முதல்வர் என சொல்வதெல்லாம் நகைச்சுவையாக உள்ளதாக விமர்சனம் செய்தார்.

பின்னர், இதுவரை திமுக தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது இல்லை என்றும், அதை மாற்றிக்காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

Tags :
CHIEF MINISTERDMKGeetha JeevanNews7TamilTiruchendhur
Advertisement
Next Article