Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபல பாடகரும், நடிகருமான #ElvisPresley பயன்படுத்திய தங்க மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு!

05:09 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement
1950களில் நடிகராகவும் ஆங்கில இசையில் பிரபல இசைக்கலைஞராகவும் வலம் வந்த அமெரிக்காவைச் சேர்ந்த எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி உபயோகப்படுத்திய பொருட்களில் சில ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மண்ணின் நாட்டுப்புற இசையும், நவீன இசையையும் சேர்த்து இவர் நடத்திய இசைக் கச்சேரிகள் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக, நிற பாகுபாடுகளுக்கு எதிரான இவரது பாடல்கள் அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரது இசை நிகழ்ச்சியைப் பார்க்கக் குவிவார்கள்.

Advertisement

'500 Miles', 'After Loving You', 'Any Day Now', 'I Want You, I Need You, I Love You' போன்ற பாடல்கள் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி ஆல்பத்தில் இடம்பெற்ற பிரபல பாடல்களாகும். இவரது இசைத்தட்டுகள் அக்காலத்தில் லட்ச கணக்கில் விற்பனையாகி சாதனைப் படைத்தது. இசைக்கலைஞராக மட்டுமின்றி நடிகராகவும் ஹாலிவுட்டில் 'Love Me Tender', 'Loving You', 'Jailhouse Rock' உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட்டில் இவருக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஒருவரான இவர், ஆகஸ்ட் 16, 1977ம் ஆண்டு காலமானார்.

இதையடுத்து இவர் பயன்படுத்திய அணிகலன்கள், பொருட்கள் காட்சிப் பொருளாக ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி பயன்படுத்திய ஷீவை, கடந்த ஜூன் மாதம் 'henry aldridge auctioneers' நிறுவனம் ஏலத்திற்காக வைத்தது. எல்விஸிலியின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த ஷூ-வை இந்திய மதிப்பில் ரூ.1.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், "ஜூலை 1ம் தேதி 1956ம் ஆண்டு 'I Want You, I Need You, I Love You' என்ற பாடலை மேடையில் பாடும்போது இந்த 'blue suede' ஷூவை அணிந்திருந்தார். அவருக்கு மிகவும் பிடித்த ஷு இது. அதனால், இந்த ஷூவை அவர் தன் நண்பர்களிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லியிருந்தார். கடைசிவரை அவர்கள் இந்த ஷுவை பாதுகாத்து வைத்திருந்தனர்" என பதிவிட்டது.

இந்நிலையில், எல்விஸ் பிரெஸ்லி பயன்படுத்திய சில அரிய வகைப் பொருள்கள் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அவரது லாஸ் வேகஸ் (Las Vegas) இல்லத்தில் இருந்த ஒலிவாங்கி, 1977 மார்ச் என அடையாளமிடப்பட்ட மாத்திரைப் போத்தல், 2 பிரத்யேக தங்க மோதிரங்கள், பீச் பாய் பிரையன் வில்சன் எழுதிய கடிதம் அந்தப் பொருள்களில் அடங்கும். அவற்றின் விலை 35,000 அமெரிக்க டாலரிலிருந்து 60, 000 டாலர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

பிரெஸ்லிக்குச் சொந்தமான நகைகள் இன்றளவும் விலை மதிப்புமிக்க சொத்துகளாகக் கருதப்படுகின்றன. "Artifacts of Hollywood & Music" என்ற நிறுவனம் ஆக. 31-ம் தேதி இணையதளத்தில் ஏல விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Abigail FolgerBrian WilsonHenry AldridgeHollywoodNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article