Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“என் நெஞ்சில் குடியிருக்கும்…” - இணையத்தை கலக்கும் ‘ஜனநாயகன்’ கிளிம்ஸ் வீடியோ!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
06:28 AM Jun 22, 2025 IST | Web Editor
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு  ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையே, நடிகர் விஜய் தனது 51வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடுகிறார். இந்த நிலையில், விஜயின் பிறந்தநாளை ஒட்டி ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ இன்று நள்ளிரவில் வெளியானது.
அந்த வீடியோவில் விஜயின் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற டயலாக் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த வீடியோவில், "ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக அல்ல, மக்களுக்காகவே உருவாகிறார்.." என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து  வருகின்றனர். வெளியான 6 மணி நேரத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=MKUDHKf_pkg
Tags :
First RoarHBD Thalapathy VIJAYHBD VijayJana NayaganThalapathythalapathy vijayvijay
Advertisement
Next Article