Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

12:55 PM Nov 13, 2024 IST | Web Editor
Advertisement

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வடமாநில இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள் 4 பேரை பிடித்த மருத்துவமனை ஊழியர்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் இருவரை கைது செய்த போலீசார் 4 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்தியால் குத்திய இளைஞர்கள் 4 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆவார். பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து டிஷ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர் ஏற்கனவே இதே மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து பாக்கெட்டில் கத்தி வைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி விட்டார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiCrimeDoctorgovt hospitalguindyma subramaniyanNews7Tamil
Advertisement
Next Article