"இது கடினமான முடிவு..." - விவகாரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்திக் பாண்டியா!
ஹர்திக் பாண்டியா - நடாஷா தம்பதியினர் விவகாரத்து செய்துள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு ஹர்திக் பாண்டியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டியாளரும் நடன கலைஞரான நடாஷாவுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மே 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அகஸ்தியா எனும் பெயரில் குழந்தையும் உள்ளது.
இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது அறிவித்துள்ளதாவது..
“நாங்கள் இருவரும் 4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிவது என முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரது வாழ்க்கைக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார்.