முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திப்பு?
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இதையும் படியுங்கள் ; தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!
இந்நிலையில், வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டிலிருந்து 12 தேதி வரவிருந்த நிலையில் வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு முன்னதாகவே சென்னை திரும்பினார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.