Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம் - உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை!

சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
01:29 PM Aug 25, 2025 IST | Web Editor
சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Advertisement

மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற காலக்கெடு விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்சிகள்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.  உயர் நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.

தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.எம் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் , தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது

Tags :
cpiHighCourtlatestNewsSupremeCourtTNnews
Advertisement
Next Article