Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீர்காழியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை - தொடங்கி வைத்த இஸ்ரோ விஞ்ஞானி!

10:26 AM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

சீர்காழியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை மற்றும் அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி தொடங்கி வைத்தார்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுபம் வித்யாமந்திர் தனியார் பள்ளி இயங்கி
வருகிறது. இந்த பள்ளியில் 3-ம் ஆண்டு இளம் விஞ்ஞானிகள் பயிற்சி பட்டறை மற்றும்
அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இப்பயிற்சி பட்டறையினை இஸ்ரோ விஞ்ஞானி
முனைவர்.சுப்பிரமணி கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு செயற்கை கோள் செயல்படும் விதம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு செயற்கைக்கோள் அலைக்கற்றைகளை கண்காணிப்பது குறித்து செயல்
விளக்கம் செய்து மாணவர்களுக்களை ஊக்குவித்தார். 

இதையும் படியுங்கள் : `மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்!' - கதறி அழுத சாக்‌ஷி மாலிக்

அமெரிக்கா செயற்கைக்கோளான 'நோவா 18' செயற்கைக்கோளின் அலைக்கற்றைகளை கண்காணித்து காட்டினார். அப்போது தோன்றிய சப்தத்தை கேட்டு கூடியிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானி முனைவர். சுப்பிரமணி பேசுகையில்: 

"முதன்முறையாக இந்த பள்ளியில் செயற்கைக்கோள்களை கண்காணிப்பது எப்படி என நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அனைவரும் நிகழ்காலங்களில் செயற்கைக்கோள்களை எவ்வாறு கண்காணிப்பது, செயற்கைகோள்களிடமிருந்து எவ்வாறு சிக்னலை பெறுவது‌ என்பதை குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வீட்டிலிருந்தபடியே குறைவான செலவில் விண்வெளி அறிவியலை கற்றுக்கொள்வது என மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல் வரும் ஆண்டில் சீர்காழி சுற்று வட்டார பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விண்வெளி அறிவியலை கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

Tags :
isro scientistSirkazhiTrainingWorkshopYoung Scientists
Advertisement
Next Article