Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - இந்தியாவில் விமான சேவை பாதிப்பு!

ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
10:31 AM Jun 13, 2025 IST | Web Editor
ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

Advertisement

இதன் காரணமாக ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது. இந்த நிலையில் ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து டெல்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.

Tags :
#affectedAir serviceairstrikeIndiaIranIsrael
Advertisement
Next Article