Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!

02:52 PM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளதாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியது, “இஸ்ரேல் கால வரையின்றி காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும். அப்படி இல்லாத சூழலால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். அப்படியான பாதுகாப்பு பொறுப்பு இல்லாததால் ஹமாஸின் பயங்கரவாதம் நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு வெடித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசும்போது, “காஸாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது சரியான ஒன்றல்ல. இஸ்ரேலும் அமெரிக்காவும் நண்பர்கள். அதனாலேயே அவர்களின் எல்லா வார்த்தைகளையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டியதில்லை. நெதன்யாகு மற்றும் பைடன் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே போல முடிவு எடுத்ததில்லை. ஹமாஸின் வழியைப் பின்பற்றாதவர்களால் காஸா நிர்வகிப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜோ பைடன், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் கூறியிருந்ததை தொடர்ந்து அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ஹெர்ஜாக் போர் முடிந்ததும் காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags :
AmericaAttackBenjamin NetanyahuGazaHamasIsraelJoe bidenNews7Tamilnews7TamilUpdatesPalestineprime ministersecuritywar
Advertisement
Next Article