இஸ்ரேல்-ஹமாஸ் போர் | காசா மண்ணில் உள்ள வெடிக்காத கூண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும் - ஐ.நா. பகீர் தகவல்!
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசா மண்ணில் புதைந்து கிடக்கும் வெடிக்காத கூண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் எடுக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் சீற்றத்தை காசா தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி ஒருவர், போர் 37 மில்லியன் டன் குப்பைகளை உருவாக்கியுள்ளது. இது அகற்றப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகளின் சுரங்க சேவையின் முன்னாள் தலைவரான பெஹ்ர் லோதம்மர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரும்பாலான குப்பைகள் வெடிக்காத குண்டுகளால் நிரப்பப்பட்டிருப்பட்டுள்ளது. போர் தோடங்கிய பிறகு, ஏறக்குறைய ஏழு மாதங்கள் காசாவில் ஒரு சதுர மீட்டர் நிலத்தில் சராசரியாக 300 கிலோ இடிபாடுகள் இருந்ததாக அவர் கூறினார்.
போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் போகும். அதனைக் கொண்டு கணக்கிட்டால், காஸா இடிபாடுகளில் மறைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது . யுத்தம் தொடர்வதால், இதற்கான தீர்வு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிட முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினா், அங்கிருந்த சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.அதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் குண்டுவீச்சில் இதுவரை 34,356 போ் உயிரிழந்துள்ளனா். 77,368 காயமடைந்தனா். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளனா் என்று அவர் தெரிவித்தார்.