Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 24,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

09:54 AM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்த நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000-ஐ கடந்துள்ளது. 

Advertisement

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே,  கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி,  தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: “ராமர் கோயிலை நாங்கள் எதிர்க்கவில்லை” – திக் விஜய் சிங்

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.  இந்நிலையில்,  காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.  ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.  காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்துள்ளது.  இந்த நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000-ஐ கடந்துள்ளது.

Tags :
GazaHamasIsrelnews7 tamilNews7 Tamil UpdatesPalestinewar
Advertisement
Next Article