டெல்லி கார் வெடி விபத்திற்கு இஸ்ரேல் இரங்கல்...!
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கார் வெடி விபத்து சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன் சார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”டெல்லியின் மையப்பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் துணை நிற்கிறது"
என்று தெரிவித்துள்ளனார்.