போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் - நெதன்யாகுவை சந்தித்த பின் #Blinken பேட்டி!
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் நெதன்யாகுவை சந்தித்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போருக்கு பின்னர் பல மக்கள் அகதிகள் முகாம்களை போன்று கூடாரங்கள் அமைத்து தங்கிவருகின்றனர். போருக்கு பின்பான பிரச்னைகளை பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். புதுவகையான தோல் நோயால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கூடாரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக பாலஸ்தீன மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுற்றது. இந்நிலையில் போர்நிறுத்தம் தொடர்பாக மீண்டும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காசாவில் நடைபெறும் போர் மத்திய கிழக்குப் பகுதிகளின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் பேராபத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.
நேற்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.
'காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பது ஆகிய அமெரிக்க முன்மொழிவுகளை இஸ்ரேல் ஆதரிப்பதாக நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோல் ஹமாஸ் அமைப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு பிணைக் கைதிகளை திருப்பி அனுப்புவதன் மூலம், பாலஸ்தீனியர்களின் 10 மாத துன்பங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்” என பிளிங்கன் தெரிவித்துள்ளார். . இதையடுத்து எகிப்து நாட்டிற்கு ஆண்டனி பிளிங்கன் இன்று செல்கிறார்.