Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..." - விண்ணை முட்டும் தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை கடந்து விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
10:02 AM Apr 17, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது.

Advertisement

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்த நிலையில் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 12ம் தேதி ரூ.70 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று (ஏப்.16) கிராமுக்கு ரூ.95 ரூபாய் உயர்ந்து ரூ.8,815-க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.17) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ரூ.8,920க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம்ரூ.110க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனையாகிறது.

Tags :
22 Carat916 GoldChennaiGoldgold priceGold rategold rate todayGramnews7 tamilNews7 Tamil Updatessilversilver rateTamilNadu
Advertisement
Next Article