Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஸ்லாமிய பெண் விவாகரத்து வழக்கு! #MadrasHighCourt முக்கிய உத்தரவு!

09:51 PM Sep 04, 2024 IST | Web Editor
Advertisement

முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை மனைவி
மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தனி பிரிவு சரத்து
இல்லாவிட்டாலும், அரசியலமைப்பு உரிமையின்படி மனைவி மற்றும் குழந்தைக்கு
ஜீவனாம்சம் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஊட்டியை சேர்ந்த இஸ்லாமியப் பெண், விவாகரத்து கோரி ஊட்டி குடும்பநல
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி அப்பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில்
விவாகரத்து வழக்கு முடியும்வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை
என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மனைவி மற்றும்
குழந்தைக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தின்
உத்தரவு சரிதான் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags :
divorce casekey orderMadras High CourtMuslim womennews7 tamil
Advertisement
Next Article