Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அதிரடி - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!

06:44 AM Apr 12, 2024 IST | Jeni
Advertisement

பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, லக்னோ, குஜராத், கொல்கத்தா ஆகிய பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் மும்பை வாகடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டூ ப்ளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களும், ரஜத் பட்டிதார் 50 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி 199 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும் விளாசினர். இவ்வாறு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது.

Tags :
IPL2024MIvRCBMIvsRCBMumbaiIndiansRCBvMIRCBvsMIRoyalChallengersBangalore
Advertisement
Next Article