Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியான முதல் நாளிலேயே இப்படியா? 'தக் லைஃப்' படக்குழுவினருக்கு அதிர்ச்சி!

கமல்ஹாசன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:28 PM Jun 05, 2025 IST | Web Editor
கமல்ஹாசன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.

Advertisement

கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையே, இப்படம் இன்று (ஜுன் 5) வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியயில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :
ar rahmanKamal haasanMani Ratnamnews7 tamilNews7 Tamil UpdatesSilambarasanstrThug LifeTrisha
Advertisement
Next Article