Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்...

03:40 PM Dec 12, 2023 IST | Web Editor
Advertisement

ரஜினியின் 170-வது திரைப்படத்தின் தலைப்பு 'வேட்டையன்' என தகவல் பரவி வருகிறது. 

Advertisement

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  அனிருத்  இசையமைக்கிறார்.  இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன்,  ஃபகத் ஃபாசில்,  ராணா,  துஷாரா விஜயன்,  மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!

இந்த நிலையில்,  இன்று ரஜினியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர்.  இதற்கிடையே,  நடிகர் ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு 'வேட்டையன்' எனப் பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  இப்படத்தில் ரஜினி, அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
HBD Super Star RajinikanthHBD Thalaivanews7 tamilNews7 Tamil UpdatesRajinikanthRajinikanth birthdaySuper Star RajinikanthThalaivar 170
Advertisement
Next Article