மகா கும்பமேளா அருகே மருத்துவமனையில் பயங்கர தீவிபத்தா? - வைரல் வீடியோ உண்மைதானா?
This News Fact Checked by ‘Newsmeter’
மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய மத விழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் உத்தரபிரதேசத்தில் ஒன்றுகூடினர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கும்பமேளாவில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் நீராடுதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக சடங்குகளில் பங்கேற்கும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள், மதகுருக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வருகை தந்துள்ளனர்.
உண்மை சரிபார்ப்பு :
நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளின் பயிற்சி செய்யும் காட்சிகள்தான் தவறாக வீடியோவில் உள்ளது. வைரலான பதிவின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்ததில், கும்பமேளா காவல்துறையினரின் விளக்கத்தை நாங்கள் கண்டோம். அந்த வீடியோ உத்தரபிரதேச காவல்துறையின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் நடத்திய விழிப்புணர்வு பயிற்சியை சித்தரிக்கிறது. வதந்திகளை பரப்பியதற்காக பயனர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச காவல்துறையின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளின் X கணக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி டிசம்பர் 27, 2024 அன்று நடத்தப்பட்டது என்று தெளிவுபடுத்தியது. மேலும் அக்கணக்கில் பயிற்சியின் படத்தைப் பகிர்ந்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பயனர்களை வலியுறுத்தியது. மஹா கும்பமேளாவை முன்னிட்டு பிரக்யாராஜ் மத்திய மருத்துவமனை, பிரயாக்ராஜ் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. உண்மையான சம்பவங்களை திறம்பட கையாள்வதற்கான ஆயத்தத்தை மேம்படுத்துவது மற்றும் 2025 ஆம் ஆண்டு மாபெரும் மகா கும்பத்தின் போது மில்லியன் கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேச காவல்துறையின் Fact Check ன் X பக்கத்தில் ஒரு வைரல் இடுகையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து போலி வீடியோவைப் பற்றி வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீது கும்பமேளா காவல்துறை மூலம் எஃப்ஐஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
டிஐஜி வைபவ் கிருஷ்ணா ஒரு பதிவில், கும்பமேளா காவல்துறையினரின் தீப் பயிற்சியை வீடியோ தவறாக பகிரப்படுவதகாக தெளிவுபடுத்தினார். ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் பயனருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
முடிவு :
மகா கும்பமேளாவில் ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. நியூஸ் மீட்டரின் உண்மை சரிபார்ப்பில் அந்த வீடியோ தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு பயிற்சி வீடியோ என்று உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.