விராட் கோலி ஹார்மோனியத்துடன் கீர்த்தனை பாடுவதாக வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘PTI’
கிரிக்கெட் வீரர் விராட் கோலி கீர்த்தனை பாடுவதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கீர்த்தனை பாடுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கோலி ஹார்மோனியம் வாசிப்பது போலவும், பின்னணியில் மற்றவர்கள் பாராயணத்தில் ஈடுபடுவது போலவும் உள்ளது.
இருப்பினும், இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டதாகவும், தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாகவும் தெரியவந்தது.
உரிமைகோரல்:
ட்விட்டர் (எக்ஸ்) பயனர் ஜனவரி 17 அன்று, நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கீர்த்தனை செய்வதைக் காட்டியதாகக் கூறி, வீடியோவைப் பகிர்ந்து, "அனுஷ்கா ஷர்மாவைத் திருமணம் செய்த பிறகு, சகோதரர் (விராட் கோலி) தனது உண்மையான விளையாட்டை (கிரிக்கெட்) மறந்துவிட்டு, பஜனையும், கீர்த்தனையும் செய்வதில் ஈடுபட்டு, இதையெல்லாம் செய்யத் தொடங்கினார்" என்ற தலைப்புடன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பதிவுக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு. அதன் ஸ்கிரீன்ஷாட்:
உண்மை சரிபார்ப்பு:
இதுகுறித்து கூகுளில் முக்கிய வார்த்தை தேடலை நடத்தியபோது, வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு வீடியோ உண்மையாக இருந்திருந்தால், அது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கும். விசாரணையின் அடுத்த பகுதியில், வீடியோவை கவனமாக ஆய்வு செய்ததில் பல முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது AI-உருவாக்கப்பட்டது என்று வலுவாக பரிந்துரைக்கிறது. உதாரணமாக, விராட் கோலியின் விரல்கள் அசாதாரணமாக தெரிந்தன. பின்னணி மங்கலாகத் தெரிகிறது. அதையே சிறப்பித்துக் காட்டும் புகைப்படம் கீழே உள்ளது:
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டு, InVid தேடலின் மூலம் வீடியோவை இயக்கி, சில கீஃப்ரேம்களைக் கண்டறியப்பட்டன. Wasitai (AI கண்டறிதல் கருவி) மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கும்போது, வீடியோவில் AI-உருவாக்கப்பட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
முடிவுகளின் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது:
மற்றொரு AI கண்டறிதல் இணையதளமான 'Sightengine' மூலம் கீஃப்ரேம்களை இயக்கியபோது, இது AI உள்ளடக்கத்தின் கணிசமான ஆதாரங்களை பரிந்துரைத்தது. முடிவுகளின் ஸ்கிரீன்ஷாட்கள் கீழே உள்ளன:
பின்னர், வைரலான வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது.
முடிவு:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஹார்மோனியம் வாசித்து கீர்த்தனை செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்த விசாரணையில், வைரலான வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டதாகவும், அது உண்மை என சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.