‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?
This News Fact Checked by ‘Vishvas News’
சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது, அதில் ஒரு விமானம் சாலையில் நகர்வதைக் காணலாம். பின்னர் விமானம் ஒரு வாகனத்துடன் மோதுகிறது. சில பயனர்கள் இந்த காணொளியைப் பகிர்ந்து, இந்த காணொளி லூதியானாவின் சஹ்னேவால் நகரத்தில் பதிவிடப்பட்டதாக கூறுகின்றனர்.
இதுகுறித்த விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. சஹ்னேவாலைச் சேர்ந்ததாகக் கூறி மக்கள் வைரலாக்கி வரும் காணொளி உண்மையில் 2017 இல் ரஷ்யாவில் நடந்த ஒரு விபத்தைப் பற்றியது. இந்த காணொளி பஞ்சாபைச் சேர்ந்ததாகக் கூறி ஒரு தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு:
பஞ்சாப் சிங் என்ற ஃபேஸ்புக் பயனர், வைரலான வீடியோவைப் பகிர்ந்து, “சஹ்னேவாலில் இருந்து விமானத்தை இயக்கும் முயற்சி தோல்வியடைந்தது, மிகவும் மோசமான விஷயம் நடந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கான காப்பக இணைப்பை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான காணொளியை விசாரிக்க, காணொளியின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் தேடப்பட்டது. அப்போது நியூயார்க் போஸ்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணொளி கிடைத்தது. இந்த காணொளி ஆகஸ்ட் 9, 2017 அன்று பதிவேற்றப்பட்டது. வழங்கப்பட்ட தகவலின்படி, இந்த காணொளி ரஷ்யாவிலிருந்து வந்தது.
"வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா சரிபார்க்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் ஒரு வைரல் வீடியோ கிடைத்தது. ஆகஸ்ட் 8, 2017 அன்று பகிரப்பட்ட வீடியோவுடன் வழங்கப்பட்ட தகவலின்படி, ரஷ்யாவின் செச்சினியாவில் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் இருந்து புறப்பட முயன்றபோது ஒரு சிறிய விமானம் வேன் மீது மோதியது. விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்." என பகிரப்பட்டுள்ளது.
வைரல் காணொளி தொடர்பான கூடுதல் செய்திகளை இங்கே காணலாம்.
லூதியானாவில் உள்ள டைனிக் ஜாக்ரனின் பணியகத் தலைவர் பூபேந்திர பாட்டியாவுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்தபோது, வைரலாகும் கூற்று தவறானது என்று அவர் கூறினார். இந்த வீடியோ சஹ்னேவாலின்து அல்ல என தெளிவு படுத்தினார்.
இறுதியாக, காணொளியைப் பகிரும் பக்கத்தை ஸ்கேன் செய்தபோது, அந்தப் பயனர் லூதியானாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
முடிவு:
விமானம் கார் மீது மோதிய வைரலான காணொளி லூதியானாவின் சஹ்னேவாலில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என்று விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த காணொளி 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஒரு விபத்திலிருந்து எடுக்கப்பட்டது, இது இப்போது பஞ்சாபில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.