Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?

07:39 PM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by ‘IndiaToday

Advertisement

சாலை ஓரத்தி சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட குழந்தை ஒன்று யாசகம் கேட்கும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு குழந்தை சாலையின் ஓரத்தில் மயங்கிக் கிடப்பதை காட்டும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ முதலில் நவம்பர் 20 ஆம் தேதி ட்விட்டர் (எக்ஸ்) பயனர் ஒருவரால் பகிரப்பட்டது. இந்த வீடியோ ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூலைச் சேர்ந்தது என்றும், வீடியோவில் உள்ள குழந்தை தாக்கப்பட்டதாகவும், சாப்பிட உணவு இல்லை என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

https://twitter.com/SanthoshKu34277/status/1859079257214927060

இந்நிலையில் குழந்தையைப் பார்த்து பலர் கலக்கமடைந்த நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் இது உண்மையான குழந்தையா அல்லது AI-யால் உருவாக்கப்பட்டதா? என்ற மற்றொரு விவாதத்தை தூண்டியுள்ளது.

AI-ஆ அல்லது உண்மையானதா?

குழந்தையைத் தவிர, வீடியோவில் ஒரு சிறிய வாளி, சீரற்ற சிமென்ட் பகுதி மற்றும் சில வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அனைத்து பொருட்களுக்கும் இரண்டு நிழல்கள் இருப்பது கவனிக்கப்பட்டது.

இதன்மூலம், வீடியோ மாலை அல்லது இரவில் படமாக்கப்பட்டதாகவும், இரண்டு வெவ்வேறு ஒளி மூலங்கள், தெருவிளக்குகள் மூலம் நிழல்கள் வீசப்பட்டதாகவும் தெரியவந்தது. குழந்தைக்கு அருகில் உள்ள தெருவிளக்கு இருண்ட மற்றும் குறுகிய நிழலை வீசுகிறது. மற்ற தெரு விளக்குகள் இலகுவாகவும் பெரியதாகவும் இருக்கிறது.

பொருள்கள் நகரும்போது, ​​நிழல்களும் ஒத்திசைந்து நகர்ந்தன. இப்போது, ​​மிகவும் அதிநவீன AI கருவிகள் கூட நிழல்கள் மற்றும் பொருள்களை அத்தகைய பரிபூரணத்துடன் பொருத்தும் திறன் கொண்டவை அல்ல. AI ஐப் பயன்படுத்தி வீடியோ உருவாக்கப்படுவதற்கான சாத்தியத்தை இது நிராகரிக்கிறது.

கர்னூலில் இருந்து வந்ததா?

வீடியோவில், AP21 P7435 என்ற நம்பர் பிளேட் கொண்ட பைக் இருப்பது கவனிக்கப்பட்டது. AP21 என்பது ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் குறியீடு.

மேலும், அந்த வீடியோவை முதலில் பகிர்ந்த நபர், இந்த வீடியோவின் இடம் கர்னூலில் உள்ள டிரஸ் சர்க்கிள் ஷாப்பிங் மால் என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளார். இந்த இடத்தின் தெருக் காட்சியை Google வரைபடத்தில் சரிபார்க்கப்பட்டது. டிரஸ் சர்க்கிள் ஷாப்பிங் மாலுக்கு எதிரே "பிரதிமாஸ்" என்ற அழகு நிலையத்தைக் காணலாம். பார்லர் போர்டில் இருந்த தொடர்பு எண்ணைப் பயன்படுத்தி, அதன் உரிமையாளர் பிரதிமா கணேஷை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்கப்பட்டது.

https://maps.app.goo.gl/KrAXtsiQedpacimD6

இந்த வைரலான வீடியோ, டிரெஸ் சர்க்கிள் ஷாப்பிங் மாலுக்கு அருகில், அவரது பார்லருக்கு எதிரே படமாக்கப்பட்டது என்பதை, பிரதிமா உறுதிப்படுத்தினார். இந்த குழந்தை மாலையில் அங்கு பிச்சை எடுப்பதை அடிக்கடி பார்ப்பதாக அவர் எங்களிடம் கூறினார். குழந்தையிடம் பெற்றோர் மற்றும் இருப்பிடம் பற்றி பேச முயற்சித்ததாகவும், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும், பணம் மட்டுமே கேட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

வைரல் வீடியோ படமாக்கப்பட்ட இடத்தின் படங்களையும் பிரதிமா பகிர்ந்துள்ளார், குழந்தை அமர்ந்திருப்பதைக் காணக்கூடிய சீரற்ற சிமென்ட் பகுதியின் மேல் வலதுபுறம் நின்று கொண்டிருந்தார். இதன்மூலம், ஆந்திராவின் கர்னூலில் உள்ள டிரஸ் சர்க்கிள் ஷாப்பிங் மாலுக்கு அடுத்துள்ள பார்லர் முன்பு வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

குழந்தைக்கு என்ன நடந்தது?

நவம்பர் 22 அன்று, கர்னூலில் இரண்டு குழந்தைகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி, வெள்ளிப் பெயிண்ட் பூசப்பட்ட இரண்டு குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

https://twitter.com/naralokesh/status/1859173679000678490

முடிவு:

தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வைரலான வீடியோவில் காணப்பட்ட குழந்தை உட்பட மொத்தம் 9 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. மேலும், அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Note : This story was originally published by ‘IndiaToday and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Andhra PradeshChildFact CheckKurnoolKurnool PoliceNara LokeshNews7TamilShakti Collective 2024Silver PaintTeam Shaktiviral video
Advertisement
Next Article