Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது உயிரிழந்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?

05:34 PM Nov 22, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by Aajtak

Advertisement

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது நவம்பர் 13-ம் தேதி உயிரிழந்ததாக வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, நவீன மலேசியாவின் ஐகான் என்று அழைக்கப்படுகிறார். மலேசியாவின் பிரதமராக 1981 முதல் 2003 வரை முதல் முறையாகவும், 2018 முதல் 2020 வரை இரண்டாவது முறையாகவும் அவர் பணியாற்றினார். 99 வயதான அவரின் உடல் நலக்குறைவு குறித்த செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி வெளியாகும்.

இந்நிலையில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மரணம் தொடர்பான பல பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மகாதீர் முகமது இந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி புதன்கிழமை காலமானார் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து முகநூல் பயனர் ஒருவர், மகாதீர் முகமதுவின் புகைப்படத்தை வெளியிட்டு, “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியுன். டாக்டர் மகாதீர் பின் முகமது (பிறப்பு: ஜூலை 10, 1925 - இறப்பு: நவம்பர் 13, 2024) நவீன மலேசியாவின் தந்தை மகாதீர் முகமது, அவர் இனி இல்லை. பிரிந்த ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் அமீன், சும்மா அமீன்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி குறித்த இந்தியா டுடே உண்மைச் சரிபார்ப்பில் இந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இறந்தது மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அல்ல, அவரது நண்பரும், முன்னாள் நிதியமைச்சருமான டைம் ஜைனுதீன் என்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, தனது சக ஊழியரின் மறைவுக்குப் பிறகு தனது சமூக ஊடகப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உண்மை சரிபார்ப்பு:

மலேசியாவின் பிரதமராக மகாதீர் முகமது கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் இருந்தார். தெற்கு ஆசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் இவரும் ஒருவர். அப்படியானால், அவர் காலமானால், மலேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும். எனவே மகாதீர் முகமது காலமானாரா? என்பதை அறிய பல முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடப்பட்டது. ஆனால் அந்தத் தேடலில் இந்தக் கோரிக்கைக்கு நம்பகமான அறிக்கைகள் அல்லது தரவு எதுவும் கிடைக்கவில்லை.

மறுபுறம், கடந்த நவம்பர் 13 அன்று மலேசிய ஊடகமான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் இருந்து ஒரு அறிக்கை முக்கிய வார்த்தை தேடல் மேற்கொள்ளப்பட்டது . அதில், “மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீன் காலமானார். அவர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் நவம்பர் 13 புதன்கிழமை இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 86. அவர் 1984 முதல் 1991 வரை மற்றும் 1998 முதல் 2001 வரை மொத்தம் இரண்டு முறை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், தொடர்ந்து தேடுதலில், 13 நவம்பர் 2024 அன்று, முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனின் மரணம் குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்று கிடைத்தது. அந்த பதிவில், தனது சக ஊழியரும், அவரது அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினருமான டைம் ஜைனுதினின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “டைம் (டைம் ஜைனுதீன்) இன்று காலை காலமானார். இனத்திற்காகவும், நாட்டிற்காகவும், மதத்திற்காகவும் என்னுடன் போராடிய நண்பனை இழந்துவிட்டேன். அவரைப் போன்ற ஒரு நண்பரை இழந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என குறிப்பிட்டிருந்தார். மேலும், கடந்த நவம்பர் 14-ம் தேதி,  மலேசிய காவல்துறை குறித்தும் மகாதீர் முகமது ட்வீட் செய்திருந்தார்.

https://twitter.com/chedetofficial/status/1856533556681740733

பின்னர், இந்த விஷயத்தைப் பற்றிய கூடுதல் தேடலில், மற்றொரு மலேசிய ஊடகமான தி ஸ்டார் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், "டைம் ஜைனுதீன் இறந்த பிறகு, அவரது மனைவி முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது ஹஸ்மா முகமது அலியுடன் அவரது வீட்டிற்கு சென்றார். அவர்கள் அங்கு அரை மணி நேரம் செலவிட்டார்கள்.” என குறிப்பிடப்பட்டிருந்தது. நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோ அறிக்கையிலும் இதே தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு, மகாதீர் முகமது டைம் ஜைனுதீனின் வீட்டிற்கு நடந்து செல்வதைக் காணலாம்.

அக்டோபர் 29, 2024 அன்று, மகாதீர் முகமதுவின் உடல்நிலை குறித்த அறிக்கை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் காணப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, சுவாசக் குழாய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அக்டோபர் 29-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.” என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 29 முதல் மகாதீர் முகமதின் உடல்நிலை மோசமடைந்தது தொடர்பான எந்த தகவலும் அல்லது அறிக்கையும் எங்கள் தேடலில் கிடைக்கவில்லை.

முடிவு:

இந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி மரணமடைந்தது மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அல்ல, அவரது நண்பரும் அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சருமான டைம் ஜைனுதீன் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Aajtak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckHasnoor HussainMahathir MohamadMalaysiaNews7Tamilprime ministerTun Daim Zainuddin
Advertisement
Next Article