Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக வைரலாகும் பதிவு உண்மையா? | Fact Check

01:40 PM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Telugu Post

Advertisement

இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

இந்தியாவில் ரயில்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். பயணிகள் போக்குவரத்தைப் போலவே சரக்கு போக்குவரத்திலும் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் விமானத்தை விட ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். ரயில் பயணம் மலிவானது மட்டுமல்ல, எளிதில் அணுகக்கூடியதுமாகும். என்னதான் ரயிலில் பல நன்மைகள் இருந்தாலும் ஒருசில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக ரயில்கள் தாமதமாக வருவது, சுகாதாரமற்று இருப்பது போன்றவை குறையாக பார்க்கப்படுகின்றன. ரயில் தாமதமாக வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உள்கட்டமைப்புச் சிக்கல்கள், வானிலை, கடுமையான போக்குவரத்து, தொழில்நுட்பக் கோளாறுகள், பிற சிக்கல்கள். இந்த காலதாமதத்தால், ரயில் பயணங்கள் 12 முதல் 24 மணி நேரம் வரை தாமதமாகலாம்.

சமீபத்தில், பல செய்தி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொள்வதாக செய்தியை பகிர்ந்தது. சில செய்தி அறிக்கைகள் தாமதத்தின் நீளத்தை 42 மணிநேரத்திற்குப் பதிலாக 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் எனக் குறிப்பிடுகின்றன. இந்த சரக்கு ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு உத்தரபிரதேசத்தில் இலக்கை அடைய கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வைரலான பதிவுகளின்படி, 1316 உர மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் சுமார் 42 மணி நேரத்தில் தனது பயணத்தை முடிக்க வேண்டும், அதன் பிறகு அதிகாரிகள் அதைக் காணவில்லை என்று கண்டறிந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மைச் சரிபார்ப்பு:

சமூகவலைதளங்களில் வைரலான பதிவு தவறாக வழிநடத்துகிறது. தாமதமாக இலக்கை அடைந்தது சரக்கு ரயில் அல்ல, ஒரே ஒரு வேகன் மட்டுமே. தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடும்போது சரக்கு ரயிலில் ஒரு வேகன் காணாமல் போனதைக் காண்கிறோம் என வெளியாகியிருந்தது. தி எகனாமிக் டைம்ஸின் கூற்றுப்படி , '107462' வேகன் எண்ணில் உள்ள சரக்குகள் சரியான நேரத்தில் இலக்கை அடைய வேண்டும். இறுதியாக ஜூலை 25, 2018 அன்று வேகன் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக உ.பி.யில் உள்ள நகரத்தை சரக்கு பெட்டி அடைந்தது.

ஆனால் அந்த வேகனில் உள்ள உரங்கள் ஏற்கனவே கெட்டுவிட்டன. இந்தியா டிவியின் செய்தியின்படி, பாஸ்தியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திர குப்தா 2014 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்திலிருந்து இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் (ஐபிஎல்) மூலம் தனது பெயரில் உரங்களை பதிவு செய்தார். பயணத்தை முடிக்க 42 மணிநேரம் ஆகும் எனவும் 14 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சரக்குகளுடன் கூடிய ரயில், திட்டமிட்டபடி விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக ரயில் சரியான நேரத்தில் வரவில்லை.

நவம்பர் 2014 இல், ரயில் பஸ்தியை அடையாததால், ராமச்சந்திர குப்தா ரயில்வே அதிகாரிகளை அணுகி பல எழுத்துப்பூர்வ புகார்களை அளித்தார். பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது வழியில் ரயில் தனது போகியை இழந்தது தெரியவந்தது. வடகிழக்கு ரயில்வே மண்டல முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சஞ்சய் யாதவ் கூறுகையில், ''சில நேரங்களில், ஒரு போகியில் பழுது ஏற்பட்டால் ​​அது யார்டுக்கு அனுப்பப்படுகிறது. இந்த போகியிலும் அதுதான் நடந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact Check, இந்த இடுகை தவறாக வழிநடத்துவதாகக் கண்டறிந்தது.

இந்திய ரயில்வேயின் சரக்கு ரயில் தனது இலக்கை அடைய 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்ற கூற்று மக்களை தவறாக வழிநடத்துகிறது. சரக்கு ரயிலின் ஒரு போகி மட்டும் காணவில்லை, முழு ரயிலையும் காணவில்லை என்கிற கூற்று தவறானது.

முடிவு:

இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. சரக்கு ரயிலின் ஒரு போகி மட்டும் காணவில்லை, முழு ரயிலையும் காணவில்லை என்கிற கூற்று தவறானது. அவை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by‘Telugu Post and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
DelayFAct Cehckgoods trainYEAR
Advertisement
Next Article