Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வங்கதேசத்தில் இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

07:50 PM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by BOOM

Advertisement

வங்கதேசத்தில், ஒரு இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

சமூக வலைதளங்களில் பயனர்கள் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, “வங்கதேசத்தில், ஒரு இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்” என பதிவிட்டுள்ளனர்.

BOOM விசாரணையில், வைரலான வீடியோவில் உள்ள பெண்ணின் பெயர் கோஹினூர் எனவும், அவர் ஒரு டிக்டாக் பிரபலம் எனவும் கண்டறியப்பட்டது. மேலும், இவர் மீது 2 முறைக்கு மேல் திருட்டு குற்றச்சாட்டு உள்ளதாகவும், கோஹினூர் ஒரு ரோஹிங்கியா முஸ்லிம் எனவும் தெரியவந்துள்ளது.

ட்விட்டர் (எக்ஸ்) இல் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பயனர், ‘வங்கதேசத்தின் அனைத்து இந்து பெண்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். ஏனென்றால் இந்தியா உட்பட முழு உலகமும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தயவில் அவர்களை விட்டுவிட்டன. வங்கதேச முஸ்லிம்கள் இந்து பெண்ணை ஹிஜாப் அணிய வற்புறுத்த முயற்சிக்கின்றனர். இந்துப் பெண் அவர்கள் காலில் விழுந்து, தன்னை விட்டுவிடுமாறு வேண்டுகிறாள்” (பதிவின் காப்பக இணைப்பு)

 இந்த வீடியோவும் அதே கூற்றுடன் சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் வைரலானது (பதிவின் காப்பக இணைப்பு)

உண்மைச் சரிபார்ப்பு:

இந்தச் சம்பவத்தில் வகுப்புவாதக் கோணம் இல்லை என கண்டறியப்பட்டது. வைரலான பதிவு பற்றி அறிய பூம் பங்களாதேஷ் அணியை BOOM தொடர்பு கொண்டபோது, வைரலான வீடியோ வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியைச் சேர்ந்தது என்பதை பூம் பங்களாதேஷ் அணி உறுதிப்படுத்தியது.

பூம் பங்களாதேஷ் சுயாதீன தொலைக்காட்சி நிருபர் தௌஃபிகுல் இஸ்லாம் லிபுவை விசாரணைக்காக தொடர்பு கொண்டது. இதை அவர் பூமிடம் உறுதிப்படுத்தினார்.

அவர்கள் “வீடியோவில் காணப்படும் பெண்ணின் பெயர் கோஹினூர். அவர் ஒரு டிக்டாக்கர் மற்றும் அவர் குதுப் ஆலம் அகதிகள் முகாமில் வசிக்கும் ஒரு ரோஹிங்கியா முஸ்லீம்.”என உறுதிபடுத்தினார்.

இதுகுறித்து லிபு மேலும் கூறுகையில், "குதுப் ஆலம் ரோஹிங்கியா அகதிகள் முகாமுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் சிட்டகாங் பிரிவின் டெக்னாஃப் பகுதியில் முன்னதாக தாக்கப்பட்டார்." எனவும் கூறினார்.

கோஹினூர் மீது டெக்னாஃப் அல்லது காக்ஸ் பஜாரின் உகியா காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

BOOM பின்னர் Facebook இல் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடுவதன் மூலம் மேலும் விசாரித்தது. அப்போது அப்பெண்ணின் TikTok மற்றும் Instagram கணக்குகளை அடையாளம் காண வழிவகுத்த பல பதிவுகள் கண்டறியப்பட்டன. (காப்பக இணைப்பு)

மேலும், கோஹினூர் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர் துன்புறுத்தப்படும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 7-ம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வைரலான வீடியோ தொடர்பான மற்றொரு வீடியோ கண்டறியப்பட்டது. இந்த வீடியோவில், ஒரு கும்பல் கோஹினூரை சேற்றில் தள்ளி அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து, சாலையைக் கடந்து, அவர் தாக்கப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைவதைக் காணலாம்.

அதன் தலைப்பு, 'டிக்டாக்கர் கோஹினூர் காக்ஸ் பஜாரில் ராமுவிடம் மொபைலைத் திருடியபோது பிடிபட்டார்'. என இருந்தது. (காப்பக இணைப்பு)

கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி அந்த இடத்தை கோஹினூர் காக்ஸ் பஜாரில் உள்ள ராமு சிட்டி ஸ்டே ஹவுஸ் என்று அடையாளம் கிடைத்தது.

தாக்குதல் நடந்த இடம் கட்டிடத்தின் தரை தளம், அங்கு படிக்கட்டுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் விசாரணைக்காக கோஹினூர் தொடர்பு கொள்ளப்பட்டார். வைரலான வீடியோவில் காணப்பட்ட பெண் அதே பெண் என்றும், சம்பவத்தில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினர். ஆனால், போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BangladeshFact CheckHijabhinduMuslimNews7TamilriotShakti Collective 2024Team Shakti
Advertisement
Next Article