Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகா கும்பமேளாவில் ஹர்ஷா ரிச்சாரியா காவலர் ஒருவருடன் இருக்கும் பதிவு உண்மையா?

மகா கும்பமேளாவில் பிரபலமான ஹர்ஷா ரிச்சாரியா காவலர் ஒருவருடன் இருக்கும் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
09:37 AM Feb 22, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘India Today

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பலர் இணையத்தின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களில் ஒருவர் ஹர்ஷா ரிச்சாரியா, சமூக ஊடகங்களால் "பியூட்டிஃபுல் சாத்வி" என்று அழைக்கப்படுகிறார். ரிச்சாரியா ஒரு காரில் இருந்து இறங்கி, ஒரு போலீஸ் அதிகாரியுடன் புகைப்படம் எடுத்து, பின்னர் அவரை முத்தமிடுவதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இது AI-ஆல் உருவாக்கப்பட்ட காணொளி என்று உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஹர்ஷா ரிச்சாரியா ஜனவரி 19 அன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அசல் காணொளியை வெளியிட்டார். அந்த காணொளி AI உதவியுடன் எடிட் செய்யப்பட்டு வைரலான கிளிப் உருவாக்கப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான காணொளியை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, ​​ரிச்சாரியாவின் கை திடீரென வழக்கத்திற்கு மாறாக சிறிய அளவிற்கு சுருங்கி வருவது தெரியவந்தது. இது AI ஐப் பயன்படுத்தி வீடியோ உருவாக்கப்படுவதையோ அல்லது எடிட் செய்யப்படுவதையோ குறிக்கிறது.

வீடியோவின் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில், ஜனவரி 15 அன்று அதே கிளிப்பைக் கொண்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு கிடைத்தது. இருப்பினும், இந்த வீடியோவில் “PixVerse.ai” என்ற வாட்டர்மார்க் இருந்தது, இது இந்த கருவியைப் பயன்படுத்தி வீடியோ மாற்றப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

PixVerse.ai என்ற AI கருவி, முதன்மையாக மேம்பட்ட AI வழிமுறைகள் மூலம் படம் மற்றும் படத்திலிருந்து வீடியோ உருவாக்கம், திருத்துதல் மற்றும் மேம்பாடு போன்ற சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக, வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட ப்ராம்ட்டைப் பயன்படுத்தி இரண்டு நபர்களின் ஸ்டில் படத்திலிருந்து முத்தமிடும் வீடியோவை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காண்பிக்கும் ஒரு டெமோ இடம்பெற்றுள்ளது. இது வைரலான வீடியோ ஒரு டீப் ஃபேக்காக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் ஆதரிக்கிறது.

ஜனவரி 19 அன்று "#mahakumbh2025" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட ரிச்சாரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அசல் காணொளியும் கிடைத்தது. இந்த காணொளி பெரும்பாலும் அதேதான், ஆனால் முத்தம் எதுவும் இல்லை.

எனவே, வைரலான காணொளி ஒரு Deep Fake என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Beautiful SadhviFact CheckHarsha RichhariyaMaha Kumbh 2025News7Tamilnews7TamilUpdatesPrayagrajShakti Collective 2024Team ShaktiUttarpradesh
Advertisement
Next Article