Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா? உண்மை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!

04:25 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.  அதன்படி, இன்னும் 15 நாட்களில் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவின. இது குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு, விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை என்றும், அப்படியான ஆலோசனைகள் ஏதும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கியுள்ளது.

இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளதாவது:

"அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது' என்ற தகவல் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
age limitGovernment Employeestamil naduTN Fact CheckTN Govt
Advertisement
Next Article