Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?

நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனை படுக்கையில் இருக்கும்படி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
08:55 AM Feb 15, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Vishvas News

Advertisement

நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனை படுக்கையில் இருக்கும்படி புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்வதன் மூலம், ராஷ்மிகாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது என்றும், அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்த விசாரணையில், அந்தப் பதிவில் கூறப்பட்ட கூற்று தவறானது என கண்டறியப்பட்டது. உண்மையில் வைரலான புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அசல் புகைப்படம் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளர் நிக்கி சாப்மேனுடையது.

வைரல் பதிவு:

'ரியா சர்மா' என்ற பேஸ்புக் பயனர் பிப்ரவரி 6, 2025 அன்று இந்த வைரல் பதிவைப் பகிர்ந்து, "அதிர்ச்சியூட்டும் செய்தி: திடீர் உடல்நலக் குறைவால் ராஷ்மிகா மந்தனா கவலைக்கிடமாக உள்ளார்!" என்று தலைப்பிட்டார். இந்தப் பதிவில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மற்றும் விஜய் தேவரகொண்டாவின் படங்களும் உள்ளன.

பதிவின் காப்பக இணைப்பை இங்கே காண்க.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான கூற்றின் உண்மையைக் கண்டறிய, இதுதொடர்புடைய முக்கிய வார்த்தைகளின் உதவியுடன் கூகுளில் தேடப்பட்டது. ஜனவரி 11ம் தேதி ராஷ்மிகா மந்தனா தனது காலின் படங்களைப் பகிர்ந்து, மேலும் ஜிம்மில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்தும், வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் குணமடைவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு, அவர் தனது சமீபத்திய பல படங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்.

பின்னர் வைரலான புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, ஜனவரி 9, 2025 அன்று ஆங்கில தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளர் நிக்கி சாப்மேன் பேஸ்புக் பக்கத்தில் செய்த ஒரு பதிவில் அசல் புகைப்படம் கிடைத்தது. அதில் ராஷ்மிகா மந்தன்னாவின் முகம் காட்டப்படவில்லை, மாறாக நிக்கி சாப்மேனின் முகம் காட்டப்பட்டது. அந்தப் பதிவில், அவர், “இன்று மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மற்றும் ஊக்கமளிக்கும் நாள். நான் @bbcmorninglive இல் ஒரு தனிப்பட்ட தலைப்பைப் பற்றிப் பேசினேன் - மூளைக் கட்டிக்குப் பிறகு மண்டை ஓட்டிலிருந்து மீள்வது. எனது கட்டி 5 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டது“ என இருந்தது.

அசல் புகைப்படத்திற்கும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கீழே உள்ள படத்தொகுப்பில் காணலாம்.

இதற்குப் பிறகு, வைரல் பதிவில் காணப்படும் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் படங்களையும் கூகுள் லென்ஸ் மூலம் தேடியதில் இந்தப் படங்கள் தெலுங்கு மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டது.

மேலும் தகவலுக்கு, மும்பையில் பொழுதுபோக்கு செய்திகளை வழங்கும் டைனிக் ஜாக்ரனின் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவை தொடர்பு கொண்டபோது, அவர் இந்தக் கூற்றை மறுத்தார்.

இறுதியாக, தவறான கூற்றைப் பகிர்ந்த பயனாளர் ரியா சர்மாவின் கணக்கை ஸ்கேன் செய்தபோது, அந்தப் பயனரை சுமார் 20 லட்சம் பயனர்கள் பின்தொடர்வது கண்டறியப்பட்டது.

முடிவு:

நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனை படுக்கையில் இருக்கும் படம் குறித்து கூறப்படும் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. உண்மையில் வைரலான படம் எடிட் செய்யப்பட்டது. அசல் படம் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளர் நிக்கி சாப்மேனின்து.

Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
ActressFact CheckNews7Tamilnews7TamilUpdatesRashmika MandannaShakti Collective 2024Team ShaktiTelugu actress
Advertisement
Next Article