“அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா?” - துணை வேந்தர்கள் நியமன வழக்கு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கேள்வி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட திருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த திட்டமிட்டு கொண்டு வந்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? அல்லது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் வழங்கப்பட்ட தீர்ப்பா? என சிலர் பேசுகிறார்கள்.
ஆளுநர் தொடர்ந்து பிரச்சனை செய்வதால் தான் தமிழ்நாட்டில் பிரச்சனை மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட எந்த மாநிலங்களிலாவது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் மசோதாக்கள் ஏன் நிலவில் உள்ளது.
நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு அனுமதி கொடுப்பதுதான் நிதி ஆயோக். மக்கள் நலனுக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் செல்கிறார். 10 ஆண்டுகளாக இருந்த மதுபான வழக்கை இன்று எடுத்திருப்பது போன்று அதானி மீது இருக்கும் வழக்கையும் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்குமா? அமலாக்க துறையின் சோதனை அதானி விவகாரத்திலும் நடந்தால் மத்திய அமைச்சர் எல் முருகனின் கூற்று சரி என ஏற்றுக்கொள்ளலாம்”
இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.