Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கார்ட்டூன் நெட்வொர்க்" சேனல் மூடப்படுகிறதா? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

09:43 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படலாம் என்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “RIPCartoonNetwork” என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் கார்ட்டூன் சேனல் "மூடப்படும்" என்று கூறினர். "அனிமேஷன் வொர்க்கர்ஸ் இக்னிட்டட்" என்ற ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "கார்ட்டூன் நெட்வொர்க் இறந்துவிட்டதா?!" என்ற பெயரில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ வைரலான நிலையில், அதில், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும், அனிமேஷன் வணிகத்தில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் நெட்வொர்க் நடைமுறையில் இல்லாமல் போனது எனவும், அதேபோல பிற ஸ்டுடியோக்களும் அழிந்து வருகிறது என்பதை வைரலான வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனிமேஷன் தொழிலாளர்கள் பற்றியும் இந்த வீடியோவில் விவாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் திரளான எண்ணிக்கையில் வேலையில்லாமல் போவார்கள் என்றும், மேலும் பலர் ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு மேலாக வேலையில்லாமல் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அனிமேஷன் ஸ்டூடியோக்கள் வீட்டிலிருந்தே இயக்கப்பட்ட நிலையில், தடையின்றி உற்பத்தியைத் தொடரக்கூடிய ஒரே பொழுதுபோக்கு வடிவங்களில் ஒன்றாக இது அமைந்தது. ஆனால் ஸ்டுடியோக்கள் அடுத்தடுத்த திட்டங்களை ரத்துசெய்து, அவுட்சோர்சிங் வேலைகள் மற்றும் கலைஞர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வதன் மூலம் அனிமேஷன் திரைத்துரை தொய்வை சந்தித்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய பெரிய அனிமேஷன் ஸ்டுடியோக்கள், செலவினங்களைக் குறைப்பதன் மூலமும், ஊழியர்களைக் குறைப்பதன் மூலமும், CEOக்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்கான பணப் பலன்களை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். ஆகவே, நலிவடைந்த அனிமேஷன் துறையை மீட்டெடுக்கும் வகையில் இந்தக் கணக்கைப் பின்தொடர்வதன் மூலம் TAG (The Animation Guild) க்கு உதவ இன்னும் பல வழிகளுக்கு #RIPCartoonNetwork மற்றும் #StayTuned ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் நெட்வொர்க் நிகழ்ச்சிகளைப் பற்றி இடுகையிடவும் என அந்த வைரல் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
Tags :
Animation WorkersCartoon NetworkCNNews7Tamilnews7TamilUpdatesRIP Cartoon Network
Advertisement
Next Article