‘MVA கூட்டணி விவசாயிகள் நிலத்தை வக்ஃப் வாரியத்திற்கு மாற்ற கோரும்’ என வைரலாகும் சஜ்ஜாத் நோமானியின் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Factly’
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகளின் நிலங்கள் மற்றும் இந்து மத ஸ்தலங்களை வக்பு வாரியத்திற்கு மாற்ற கோருவார்கள் என மௌலானா சஜ்ஜாத் நோமானி கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரான மௌலானா சஜ்ஜாத் நோமானி, “மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயிகளின் நிலங்கள் மற்றும் இந்து மத ஸ்தலங்களை வக்பு வாரியத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்பார்கள்” என்றுகூறியதாக செய்தித்தாள் கிளிப்பிங் (இங்கே, இங்கே, மற்றும் இங்கே) சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
வைரல் உரிமைகோரலின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, இதுதொடர்புடைய முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டது. இந்த தேடல் மௌலானா சஜ்ஜாத் நோமானி இந்த அறிக்கைகளை வழங்கியதாக நம்பத்தகுந்த அறிக்கைகள் எதும் கிடைக்கவில்லை. அவர் உண்மையாகவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தால், ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும். மேலும், அவருடைய சமூக வலைதள கணக்குகளும் (இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே) சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவர் அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டதாகக் குறிப்பிடும் பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த வைரலான செய்தித்தாள் கிளிப்பிங் வெளியிட்ட நிறுவனம் 'ராஷ்ட்ரிய உஜாலா' என்றும், நிருபர் 'அங்கித் பதக்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் ஆராய்ச்சி செய்து, 'ராஷ்ட்ரிய உஜாலா' என்ற இணையதளம் கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளம் மற்றும் அதன் இ-பேப்பர் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் வைரல் கிளிப்பிங்கில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. 'ராஷ்ட்ரிய உஜாலா' இணையதளம் ஒரு மறுப்பு செய்தியும் வெளியிட்டிருந்தது. 'ஸ்ரீ உத்தவ் தாக்கரே பற்றிய தவறான மற்றும் தீங்கிழைக்கும் செய்திகள் ராஷ்ட்ரிய உஜாலாவுக்கு தவறாகக் கூறப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலுக்கும் எங்கள் வெளியீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், 'ராஷ்ட்ரிய உஜாலா' நாளிதழ் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பகிரப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தும் 'ராஷ்ட்ரிய உஜாலா' (தெய்னிக் ராஷ்ட்ரிய உஜாலா') இன் பேஸ்புக் பதிவும் (காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு ) கவனிக்கப்பட்டது. அதன்மூலம் பிரணவ் டோக்ரா மற்றும் அங்கித் பதக் ஆகியோருக்கும் 'ராஸ்த்ரிய உஜாலா' நாளிதழுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது..
இந்தத் தேடலின் போது, மௌலானா சஜ்ஜத் நோமானி 19 நவம்பர் 2024 அன்று ட்விட்டர் (எக்ஸ்) இல் ஒரு பதிவு (காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு) கிடைத்தது. அவர் தனது ஆதரவிற்கு ஈடாக மகா விகாஸ் அகாதியிடம் (MVA) எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என தெளிவுபடுத்தினார். அந்த பதிவில், ‘மஹா விகாஸ் அகாதியின் கட்சிகளுக்கு 17 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் எழுதியதாக சில ஊடக நண்பர்களும், சில வகுப்புவாதிகளும் என்னை சில கவுன்சிலில் இணைத்து வருகின்றனர். நான் எந்தவொரு உலமா சபை அல்லது சபையின் தலைவனோ அல்லது உறுப்பினரோ இல்லை. அத்தகைய கடிதம் எதையும் நான் எழுதவில்லை.' என குறிப்பிட்டுள்ளார்.
மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி மகாராஷ்டிராவில் இந்திய தேசிய காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) உள்ளிட்ட NDA அல்லாத அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டது.
முடிவு:
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இந்து மற்றும் விவசாயிகளின் நிலங்களை வக்ஃப் வாரியத்திற்கு மாற்ற மௌலானா சஜ்ஜாத் நோமானி எம்விஏவிடம் கோரினார் என்று குற்றம் சாட்டும் இந்த வைரலான 'ராஷ்ட்ரிய உஜாலா' செய்தித்தாள் கிளிப்பிங் போலியானது. அவர் அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.