Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருடன் இணைகிறாரா? - சர்ப்ரைஸ் சொன்ன நடிகர் விக்ரம்!

08:01 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

இந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த மலையாள இயக்குநருடன் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து பா.ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தங்கலான் படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை விக்ரம் தொடங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 28) கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விக்ரம் மலையாள இயக்குநர் ஒருவருடன் கதைப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த ஆண்டு ஹிட் படம் கொடுத்த மலையாள இயக்குநருடன் ஒரு படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல் எதுவும் என்னால் இப்போது சொல்ல முடியாது. இது ஒரு பீரியட் கதை. இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம்” என தெரிவித்தார்.

இந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்தவர்கள் என்ற வகையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம். இப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றபோது அப்படக் குழுவினரை கமல், ரஜினி உட்பட பல்வேறு தமிழ் நடிகர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள். அதில் நடிகர் விக்ரமும் ஒருவர். இந்த சந்திப்பின் போது விக்ரமிடம் சிதம்பரம் கதை ஒன்றை சொல்லியிருப்பதாகவும், இதுகுறித்த விவாதம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியது.

தற்போது விக்ரம் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளது முன்பே வெளியான தகவலுடன் ஒத்துப்போவதால் விக்ரம் மஞ்சும்மல்ல் பாய்ஸ் இயக்குநருடன் இணைவது கிட்டதட்ட உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 62வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வீர தீர சூரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Cinema updatesManjummel BoysNews7Tamilnews7TamilUpdatesthangalaanvikram
Advertisement
Next Article