Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்ஹாசன்?

03:20 PM Dec 12, 2023 IST | Web Editor
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Advertisement

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக். 1-ம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து 7-வது முறையாக நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.  பிக் பாஸ் தமிழை பொறுத்தவரை கமல் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  JNU வளாகத்தில் போராட்டங்களுக்கு தடை | மீறினால் ரூ.20,000 அபராதம்!

பலமுறை கமலின் முடிவுகளை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.  இந்த நிகழ்ச்சி மூலம் கமலுக்கு பெரியளவு வருமானம் கிடைத்தாலும்,  வார இறுதி நிகழ்ச்சிகளில் தனது அரசியல் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு மேடையாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார்.  ஆனால், பிக் பாஸ் சீசன் 7-ல் கமலின் பல்வேறு முடிவுகள் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

உதாரணமாக பிரதீப் ஆண்டனியை பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது,  நிக்சனின் கொலை மிரட்டலை பெரிதுபடுத்தாமல் எச்சரிக்கையோடு நிறுத்தியது,  வினுஷா குறித்து நிக்சன் பேசிய சர்ச்சை கருத்தை ஆரம்பத்திலேயே கேட்காமல் விட்டது போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கமலுக்கு எதிராக இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்,  ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த சீசனோடு கமல் விலகவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இருப்பினும்,  கமல்ஹாசன் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை.

Tags :
BB Tamil Season7BB7TamilBigg Boss TamilBigg Boss Tamil Season7Bigg Boss7 TamilKamal haasannews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article