Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போகிறதா #Indian3? வெளியான அப்டேட்!

02:10 PM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியன் 3 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த ஜூலையில் வெளி வந்தது. இதில் பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில், சில காட்சிகளை மீண்டும் எடுக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியன் 2 படத்தின் வணிக தோல்வியால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இந்தியன் -3 படத்தை அவர்கள் குறைந்த விலைக்குக் கேட்பதாகவும் கூறப்பட்டது.

இதனால், இந்தியன் -3 படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Indian 3Kamal haasanNetflixshankar
Advertisement
Next Article