Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.2000-க்கு மேல் UPI பணபரிமாற்றம் செய்தால் GST வரியா? - மத்திய அரசு விளக்கம்!

ரூ.2000-க்கு மேல் UPI பணபரிமாற்றம் செய்தால் GST வரி விதிக்கபரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
10:40 PM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

அனைத்து UPI செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் மத்திய நிதி அமைச்சகம் வசம் உள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுபற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என்று செய்திகள் பரவின.  இந்த நிலையில், ரூ.2,000க்கு மேல் மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு GST  விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் சமீபத்திய செய்திகளை நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக பத்திரிக்கை  தலவல் பணியகம் (PIB) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ 2,000- க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது, தவறாக வழிநடத்துவது. அப்படிப்பட்ட எந்த திட்டத்தையும் அரசு முன் வைக்கவில்லை.

UPI வழியாக பணபரிவர்த்தனை செய்வதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. சில கருவிகளைப் பயன்படுத்தி செலுத்துதப்படும் பணபரிவர்த்தனை தொடர்பான வணிக தள்ளுபடி விகிதம் (MDR) போன்ற கட்டணங்களுக்கு GST விதிக்கப்படுகிறது.

ஜனவரி 2020 முதல், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), டிசம்பர் 30, 2019 தேதியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், நபரிடமிருந்து வணிகருக்கு (P2M) UPI பரிவர்த்தனைகளுக்கான வணிக தள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டுள்ளது.
தற்போது UPI பரிவர்த்தனைகளுக்கு MDR வசூலிக்கப்படாததால், இந்த பரிவர்த்தனைகளுக்கு GST பொருந்தாது.

ACI உலகளாவிய அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய நிகழ்நேர பரிவர்த்தனைகளில் இந்தியா 49% பங்கைக் கொண்டிருந்தது , இது டிஜிட்டல் கட்டண கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைவராக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
CentralGovtPAYMENTUPI
Advertisement
Next Article