Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இரு கண்ணின் கருவளையம் இரவாக..." - வெளியானது #KadhalikkaNeramillai படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

07:21 PM Nov 22, 2024 IST | Web Editor
Advertisement

ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

https://twitter.com/arrahman/status/1859939832916537802

இப்படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ பாடியுள்ளனர்.

Advertisement
Next Article