Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரானின் புதிய அதிபராகிறாரா முகமது மொக்பர்?

02:02 PM May 20, 2024 IST | Web Editor
Advertisement

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி,  விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது மொக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே,  இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  அந்த அணை திறப்பு விழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றிருந்தார்.  அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன்,  மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.  அப்போது,  அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தொடர்ந்து,  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.

இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.  இந்நிலையில், இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி  உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.  அவரது உடலும் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,  துணை அதிபர் முகமது முக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படவுள்ளார்.  விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.  ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

யார் இந்த முகமது மொக்பர்?

செப்டம்பர் 1,  1955 இல் பிறந்த மோக்பர்,  விபத்தில் பலியான அதிபர் ரைசியைப் போலவே, முன்னாள் அதிபர் அலி கமேனிக்கு நெருக்கமானவர்.   2021-ல் ரைசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மொக்பர் முதல் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
Ebrahim Raisihelicopter crashIranMohammad Mokhber
Advertisement
Next Article