Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்!

03:48 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான்,  தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

விண்வெளியியின் சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார்.  500 கிலோ எடை கொண்ட அந்த விண்கலனில் என்ன விலங்கு, எத்தனை அனுப்பப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை.

இதையும் படியுங்கள்:  வெள்ள மீட்புப் பணியில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!

ஈரான் 2013-ல் விண்கலன் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில், தரவுகளைச் சேகரிக்கும் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்தது. விரைவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

Tags :
animalsIronIssa Zarepournews7 tamilNews7 Tamil UpdatesSatellitespace
Advertisement
Next Article